திமுக தொடர்ந்த தேர்தல் விளம்பரம் தொடர்பான மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வாய்ப்பு

திமுக தொடர்ந்த தேர்தல் விளம்பரம் தொடர்பான மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வாய்ப்பு

ஆர்எஸ் பாரதி

தேர்தல் விளம்பரம் தொடர்பாக முன் அனுமதி பெறுவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருவதை எதிர்த்து திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

தேர்தல் விளம்பரம் தொடர்பாக முன் அனுமதி பெறுவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருவதை எதிர்த்து திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்தது அது வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது. திமுகவின் விளம்பரங்கள் தொடர்பான முன் அனுமதி விண்ணப்பங்களை நிராகரித்த தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவுகளை ரத்து செய்து விளம்பரங்களை அனுமதிக்க உத்தரவிட கோரி திமுக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் 6 நாட்கள் வரை காலதாமதம் செய்து வருவதாகவும், சில விளம்பரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பங்களை 2 நாட்களில் பரீசிலித்து அனுமதி தர வேண்டும் என்ற விதி இருந்தும் காலதாமதம் செய்யப்படுகிறது என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி மனு அளித்துள்ளார்.

Tags

Next Story