கோவையில் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி மனு

கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்கள் வாக்களிக்கும் வரை தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது, அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் வாக்களிக்கும் வரை தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவையை சேர்ந்த சுதந்திர கண்ணன் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. கடந்த 2019, 2021 ஆம் ஆண்டு தேர்தல்களில் வாக்களித்த நிலையில் இந்த முறை பெயர் நீக்கப்பட்டுள்ளது என்றும் தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story