மயானத்திற்கு செல்ல சுரங்க பாதை ஆர்டிஓ விடம் மனு

ஜெயங்கொண்டம் அருகே மயானத்திற்கு செல்ல சுரங்க பாதை அமைக்கஒ ஆர்டிஓ விடம் மனு கொடுத்தனர்.
அரியலூர், மே.5- ஜெயங்கொண்டம் அருகே வேம்புகுடி மக்களுக்கு மயானத்திற்கு செல்ல சுரங்கபாதை அமைத்து தரக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம பொதுமக்கள் மனு அளித்தனர் மயானத்திற்கு சுரங்க பாதை அமைத்து தராவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வேம்புகுடி கிராமத்தில் உள்ள தென்னவன்நல்லூர் பகுதியில் திண்டிவனம் டு கும்பகோணம் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மயான பாதை அடைக்கப்பட்டது இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பாதை அமைத்து தர அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அப்போது அதிகாரிகள் பாதை அமைத்து தர முடியாது என கூறியதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதிமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். மேலும் மயானத்திற்கு பாதை அமைத்து தர வலியுறுத்தி உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோட்டாட்சியர் ஷீஜாவிடம் மனு அளித்தனர். இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா தலைமையில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது இதில் கிராம மக்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு செல்லவும் கோயில் விசேஷங்களுக்கு செல்லவும் போதிய பாதை தராமல் குறுகலாக பாதை அமைந்துள்ளதாக தெரிவித்தனர் இதனையடுத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தையை தொடர்ந்து பாதையை அகலப்படுத்தி சுரங்க பாதை அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர் இதனால் நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும்போது உரிய அளவில் உரிய இடத்தில் அகலமான பாதை அமைத்து தருவதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.ஒப்புதலின் பேரில் நடவடிக்கை எடுக்கா விட்டால் அடுத்த கட்டமாக வேம்புகுடி தென்னவநல்லூர் உள்ளிட்ட 9 கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்..இதனால் உடையார்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story