தலையாரி குடிகாடு கிராமத்தில் நியாய விலை கடை அமைக்க மனு

தலையாரி குடிகாடு கிராமத்தில் நியாய விலை கடை அமைக்க மனு

தலையாரி குடிகாடு கிராமத்தில் நியாய விலை கடை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


தலையாரி குடிகாடு கிராமத்தில் நியாய விலை கடை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அரியலூர், ஜூலை.1- தலையாரி குடிகாடு கிராமத்தில் நியாய விலை கடை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் அரியலூர் மாவட்டம் தலையாரிக் குடிக்காடு கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள க.பொய்யூர் கிராமத்தில் உள்ள நியாய விலை கடைக்கு செல்ல வேண்டி உள்ளது.

இதனால் பெரும்பாலான நாட்களில் ரேஷன் பொருட்கள் தீர்ந்து விடுவதாகவும் எங்களுக்கு முறையான ரேஷன் பொருட்கள் முழுமையாக கிடைக்கவில்லை எனக் கூறி தலையாரிக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னாவை சந்தித்து தங்கள் கிராமத்திற்கு தனியாக ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர் அப்போது நடமாடும் ரேஷன் கடை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக கூறினார்

Tags

Next Story