200 ஆண்டுகள் பழமையான கோயிலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் மனு

X
200 ஆண்டுகள் பழமையான கோயிலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் மனு
100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்திற்கு உட்பட்ட காலசமுத்திரம் ஊராட்சி, ரேணுகாபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் ஊரில் உள்ள கோயிலை மீட்டு தர கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது, எங்கள் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், எங்கள் கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோயில் இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்த கோயிலை மீட்டு தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஆட்சியரியிடம் மனு கொடுக்க வந்ததால் சிறிது நேரம் பரபரப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காணப்பட்டது.
Next Story
