5.5 லட்சம் மாணவர்கள் 2024 2025 கல்வி ஆண்டில் சேர்க்க திட்டம்

அரசுப் பள்ளியில் இக்கல்வியாண்டில் 5.5 லட்சம் மாணவர்களை சேர்க்க சேர்க்கையை பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கொரோனா காலகட்டம் நிறைவடைந்ததற்கு பின்னர் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை என்பது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இந்தாண்டு அதனை அதிகப்படுத்தும் முயற்சியாக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், மார்ச் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அனைத்து கல்வி மாவட்டங்கள் ரீதியான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை என்பது நடத்தப்பட்டது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டில் மார்ச் 31 ஆம் தேதி அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 601 புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இருந்த போதும் மாணவர்கள் சேர்க்கை போதுமான அளவில் இல்லாததன் காரணமாக வருகிற 2024 2025 கல்வியாண்டில் 5.5 லட்சம் மாணவர்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி இயக்குநகரத்தின் தரவுகளை தற்போது பள்ளிக்கல்வித்துறை கையில் எடுத்துள்ளது அதில் அரசு பள்ளியில் சேராத 3 லட்சத்து 31 ஆயிரத்து 546 ஐந்து வயதை தாண்டிய குழந்தைகளின் வீட்டிற்கே சென்று அவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது. மேலும் 2018 ஆம் ஆண்டு பிறந்த ஐந்து வயதை தாண்டிய குழந்தைகள் உள்ள வீட்டிற்கு சென்று அவர்களின் பள்ளி சேர்க்கை குறித்தான தரவுகளை சேகரிக்கவும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story