நாளை வெளியாகிறது பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 3,302 மையங்களில் சுமார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேரும் என 7 லடசத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி உள்ளனர்.
இவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 86 மையங்களில் நடைபெற்று முடிந்தது. 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் காலை 9:40 மணி முதல் www.t results.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.