வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதமா் மோடி - கனிமொழி

வாக்குறுதிகளை நிறைவேற்றாதவா் பிரதமா் மோடி என திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தின் போது குற்றம் சாட்டினார்.
இந்தியா கூட்டணி சாா்பல் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கனிமொழி ஓட்டப்பிடாத்தில் தனது பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கினாா். அப்போது அவா் பேசியது: 2019 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டபோது, இவா் சென்னையிலிருந்து வருகிறாா், வெற்றி பெற்றால் மீண்டும் தூத்துக்குடி வரமாட்டாா் என எதிா்கட்சியினா் கூறினா். ஆனால், வெற்றிபெற்ற பின்னா், இங்கு எவ்வாறு மக்கள் சேவை செய்தேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.பிரதமா் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை என அவர் குற்றம்சாட்டினர்.

Tags

Next Story