திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
புதிய முனையம்
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். முன்னதாக திருச்சி சர்வதேச விமான நிலைய முனைய கட்டடத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அவருக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித் சிந்தியா மேம்படுத்தப்பட்ட பணிகள் குறித்து விளக்கினார். திருச்சி விமான நிலையத்தின் நுழைவு வாயில்களில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் தமிழர்களின் கலை பண்பாட்டை விவரிக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் மற்றும் நுழைவு வாயிலானது கோபுரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 900 பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய முனையம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
Next Story