பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம் : சூரிய உதயத்தை பார்த்தார்

பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம் : சூரிய உதயத்தை பார்த்தார்

தியானத்தில் பிரதமர் மோடி

கன்னியாகுமரியில் இன்று பிரதமர் மோடி சூரியன் உதிக்கின்ற காட்சியை பார்த்து ரசித்தார்.

பாரத பிரதமர் மோடி தியானம் செய்வதற்காக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர், திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்து சேர்ந்த பிரதமர் மோடி, அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் குண்டு துளைக்காத காரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பகவதி அம்மன் படம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு பூம்புகார் தனி படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார்.

பின்பு விவேகானந்தர் மண்டபத்தில் நின்றபடி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்தார். அதன்பிறகு தியான மண்டபத்திற்கு சென்று பிரதமர் மோடி தியானத்தை தொடங்கினார். இரவு முழுவதும் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அவர் இன்று அதிகாலை வரை அவர் தொடர்ந்து தியானம் செய்தபடி இருந்தார். மோடி இன்று அதிகாலை 5 மணிக்கு தியான மண்டபத்தை விட்டு வெளியே வந்தார். விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து காலை 5:55 மணிக்கு சூரிய உதய காட்சிகளை கண்டு ரசித்தார். அங்கிருந்து கடல் அழகையும் ரசித்து பார்த்தார். அதன்பிறகு ஸ்ரீபாத மண்டபத்திற்கு சென்ற பிரதமர் மோடி, 10 நிமிடம் அங்கு அமர்ந்திருந்தார். பின்பு காலை 7:15 மணிக்கு மீண்டும் தியான மண்டபத்திற்குள் சென்று தனது இரண்டாவது நாள் தியானத்தை தொடங்கினார்.

Tags

Next Story