அண்ணாமலை இப்படி செய்யலாமா..? - செம அப்செட்டில் பிரதமர் மோடி
தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு ஏமாற்றம்
தமிழகம் வந்த தன்னை அண்ணாமலை ஏமாற்றியதாக கூறி, பிரதமர் மோடி அப்செட்டில் இருப்பதாக பாஜகவில் பேச்சுகள் அடிப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அதில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி திருப்பூரில் நடந்த பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவதை உறுதி செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டத்தில் பெரிய கட்சிகளாக அதிமுக, பாமக தலைவர்கள் வருவார்கள் என டெல்லியில் உள்ள பாஜக தலைமைக்கு உறுதியளித்துள்ளார். ஏற்கெனவே பாஜக கூட்டணியில் தேமுதி, பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அதன் தலைவர்களை பாஜக மேடையில் ஏற்றி பிரதமர் மோடியின் முன்னாள் தனது பலத்தை நிரூபிக்க அண்ணாமலை கணக்கு போட்டிருந்தார்.
ஆனால், நடந்தது என்னமோ வேறு. தமிழகத்தின் பெரிய கட்சி தலைவர்கள் கொடுத்த அல்வாவால், அண்ணாமலை மட்டுமில்லாமல், பிரதமர் மோடியும் டென்ஷன் ஆகியுள்ளார். பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பாமக, தேமுதிக தலைவர்களும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என அண்ணாமலை காத்திருந்த நிலையில் யாரும் வரவில்லை. பிரதான கட்சிகளுக்கு பதிலாக, தொண்டர்களே இல்லாத கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, புதிய நீதிக்கட்சி, தமுமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே வந்து பிரதமருடன் மேடையில் அமர்ந்தனர்.
வழக்கமாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களை பார்த்து அவர்களுக்கு கைக்கூப்பி வணங்கி, பேசிவிட்டு இருக்கையில் அமர்வார். ஆனால், திருப்பூர் பொதுக்கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடி, யாருடனும் பெரிதாக பேசாமல் நேராக சென்று இருக்கையில் அமர்ந்துவிட்டார். இதற்கு காரணம் ஒரு பிரதமராக தான் வந்தும் பாஜகவின் கூட்டத்திற்கு பெரிய தலைவர்கள் வரவில்லை என்ற அப்செட் தான் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அதிக தொண்டர்களை கொண்ட அதிமுகவை கூட்டணியில் தக்க வைத்து கொள்ள முயற்சிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடிக்கு எதிரியான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை ஓரம்கட்டியுள்ளார். பிரதமர் மோடியின் நிகழ்வுக்கு கூட ஓபிஎஸ்க்கு அழைப்பு விடவில்லை. இதனால் அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன், பிரதமர் மோடியை தனிமையில் சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளனர்.
ஆனால், ஏற்கெனவே தனக்கு அண்ணாமலை கொடுத்த ஏமற்றத்தால் டென்ஷனான பிரதமர் மோடி, ஓ. பன்னீர்செல்வத்தை தடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. வரும் 4ம் தேதி மீண்டும் தான் தமிழகம் வர உள்ளதால், அப்போது பார்த்து கொள்ளலாம் என பிரதமர் மோடி ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலளித்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், இந்த முறை நடந்தது போல் அடுத்த முறை நடக்க கூடாது என அண்ணாமலையிடம் கராராக பேசிய பிரதமர் மோடி, அடுத்த முறை வரும்போது பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதுடன், குறிப்பாக அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்களை பாஜக பக்கம் இழுக்க வேண்டும் என்று புதிய அசைமெண்டை கொடுத்துள்ளாராம்.
என் மண் என் மக்கள் யாத்திரை நடத்தியும் பிரதமர் மோடி வரும் போது தனது ராஜத்தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே என்ற வருத்தத்தில் அண்ணாமலை உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமரின் வருகையால் தனக்கு நல்லது நடக்கும் என கனவுக்கண்ட அண்ணாமலைக்கு கூட்டணி கட்சிகள் கொடுத்த ஏமாற்றம் அவரை, வருத்தமடைய செய்துள்ளதாக பாஜகவின் தமிழக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.