டிவி, மின்விசிறியை உடைத்த பாமகவினர்... அன்புமணி மீது பாய்ந்த வழக்கு !

டிவி, மின்விசிறியை உடைத்த பாமகவினர்... அன்புமணி மீது பாய்ந்த வழக்கு !

அன்புமணி

சென்னையில் மின்கட்டன உயர்வை திரும்ப பெற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் தமிழக அரசு வழங்கிய விலையில்லா டி.வி, மின்விசிறியை உடைத்ததால் அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்ததனர்.

இதனைதொடர்ந்து பாமக சார்பில் சென்னை எழும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது அரசு வழங்கிய விலையில்லா டிவி,மின்விசிறி போன்றவற்றை தூக்கிப் போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர் பிரதீப் இலவச டிவி, மின் விசிறியை உடைத்துள்ளார்.

இதையடுத்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீது சென்னை எழும்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story