ஆண்டிமடத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக போலீசார் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
இந்நிலையில், ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும், இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதை உணர்த்துவதற்காகவும்,
போலீசார் மற்றும் சிஐஎஸ்எப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் தொடங்கியது. மாவட்ட எஸ் பி செல்வராஜ் தலைமையில் தொடங்கிய இந்த ஊர்வலமானது முக்கிய வீதிகளில் வலம் வந்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள், போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.