வாக்களிக்க உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

கோவை மக்களவை தொகுதி வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றும் சுதந்திர கண்ணன் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story