குண்டுமல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

குண்டுமல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

பூ மார்க்கெட் 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, கன்னங்குறிச்சி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த 2 நாட்களாக குண்டுமல்லி, சன்னமல்லி, ஜாதிமல்லி ஆகிய பூக்கள் கிலோவுக்கு ரூ.1,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று பூக்கள் விலை மேலும் உயர்ந்து காணப்பட்டது. அதாவது குண்டுமல்லி, சன்னமல்லி ஆகிய பூக்கள் தலா கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இதேபோல் ஜாதிமல்லி கிலோ ரூ.1,000-க்கும், காக்கட்டான் ரூ.1,200-க்கும், கலர் காக்கட்டான், மலைக்காக்கட்டான் ஆகிய பூக்கள் ரூ.1,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் செவ்வரளி ரூ.300-க்கும், அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி, சி.நந்தியாவட்டம் ஆகிய பூக்கள் ரூ.200-க்கும், ஐ.செவ்வரளி ரூ.220-க்கும், சம்பங்கி ரூ.100, சாதா சம்மங்கி ரூ.140-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story