10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்

செய்முறை தேர்வில் கலந்து கொண்டவர்கள் 

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்பட்டது.

12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், அதே போல் 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10 ஆம் வகுப்பிற்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடித்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற்றன.

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதே போல் , 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகளை இந்த தேதிகளில் எழுத உள்ளனர்.

சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை பொருத்தவரை 57 மாணவிகள் இன்று பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் எழுதுகின்றனர். தொடர்ந்து, தனித்தேர்வர்களுக்கு மார்ச்/ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறை தேர்வு (Science Practical Examinations) பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது.

மார்ச்/ஏப்ரல் 2024, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அத்தேர்வில் தேர்ச்சிபெறாத தேர்வர்கள். மேற்படி தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு தேர்வெழுதிட தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story