சிதம்பரேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத பிரதோஷ பூஜை!
கலவைப்புதூர் கிராமத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத பிரதோஷ பூஜை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த கலவைப்புதூர் கிராமத்தில் 24 சன்னதிகளுடன் அமைந்துள்ள சிவகாமி அம்மை உடனாகிய சிதம்பரேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு புனித நீர் கலசம் வைத்து யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் புனித நீர் கலசத்தை தலை மேல் சுமந்து கோவிலை வலம் வந்து மூலவர் சிதம்பரேஸ்வரருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் உற்சவர் சிதம்பரேஸ்வரர், நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு சிதம்பரேஸ்வரருக்கு, டாக்டர் ஜா.அருணாச்சலம் அபிஷேகம் செய்தார். பிரதோஷ பூஜையில் அப்பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.