உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
பக்தி பரவசத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டனர்
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள கரபுரநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு பால், நெய், இளநீர், தேன், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து கரபுரநாதர் பெரிய நாயகியுடன் சர்வ அலங்காரத்தில் நந்தி தேவர் மீது அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் உத்தமசோழபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story