களி நண்டு, சிங்கி இறால் கொழுக்க வைத்தல் பயிற்சி!

களி நண்டு, சிங்கி இறால் கொழுக்க வைத்தல் பயிற்சி!

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் களி நண்டு மற்றும் சிங்கி இறால் கொழுக்க வைத்தல்" குறித்த ஒரு நாள் நேரடி பயிற்சி நடைபெற உள்ளது.


தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் களி நண்டு மற்றும் சிங்கி இறால் கொழுக்க வைத்தல்" குறித்த ஒரு நாள் நேரடி பயிற்சி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன் வள பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான மீன் வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன் வளர்ப்பு துறை சார்பில் ''களி நண்டு மற்றும் சிங்கி இறால் கொழுக்க வைத்தல்" பற்றிய ஒரு நாள் நேரடி பயிற்சி 28.06.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்க பட உள்ளது.

இப்பயிற்சியில் வளர்ப்பிற்கேற்ற ''களி நண்டு மற்றும் சிங்கி இறால் வகைகள், களி நண்டு மற்றும் சிங்கி இறால்களில் ஆண் பெண் அடையாளம் கண்டறிதல்இ களி நண்டு மற்றும் சிங்கி இறாலின் இனவிருத்தி, களி நண்டு மற்றும் சிங்கி இறாலின் வளர்ச்சி, கொழுக்க வைக்க களி நண்டு மற்றும் சிங்கி இறால் தேர்வு செய்யும் முறை, கிடைக்கும் காலங்கள், இடங்கள், களி நண்டு மற்றும் சிங்கி இறால் வளர்ப்பு முறைகள், அறுவடை முறைகள், களி நண்டு மற்றும் சிங்கி இறால் வளர்ப்பு செலவின வருமான கணக்கீடு குறித்த தொழில்நுட்ப வகுப்பு மற்றும் செயல்விளக்க பயிற்சிகள் அளிக்கப்படும்.

பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர்களின் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் அனைவரும் 27.06.2024 மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட அலை பேசி மூலமாக அல்லது முகவரியில் தொடர்பு கொண்டு கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: பேராசிரியர் மற்றும் தலைவர், மீன் வளர்ப்பு துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம, தூத்துக்குடி - 628 008 அலை பேசி எண் (09442288850) மின் அஞ்சல்: athithan@tnfu.ac.in

Tags

Next Story