சமூக வலைதள பக்கங்களை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சமூக வலைதள பக்கங்களை தொடங்கினார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமான சமூக வலைதளம் துவங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று முதல் X தளம் , இன்ஸ்டாகிராம் பேஸ்புக் , வாட்ஸ் அப் சமூக வலைதள பக்கங்களை தொடங்கியுள்ளேன் இதன் மூலம் அரசியல் அறிவிப்புகள் தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளிட்டவை இதில் பதிவிடுவேன் இதன் மூலம் உங்களை சென்றடையும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Next Story