தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகைக்கான காசோலை முதல்வரிடம் வழங்கல்
முதளவரிடம் காசோலை வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையாக 18 கோடியே 61 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ஆர். காந்தி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார்,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஹனிஷ் சப்ரா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.