சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 உயர்வு!!
gold
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ 320 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரபடி தங்கத்தின் விலையானது தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரு சவரன் தங்கம் தீபாவளியன்று (அக்டோபர் 31ம் தேதி) ரூ59,640க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது பல மடங்கு அதிகரிக்கப்போவதாக எச்சரிக்கை செய்யப்பட்டது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தை தொட்டு விடும் என கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. சென்னையில் டிசம்பர் 3 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 57,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நவம்புர் 30, டிசம்பர் 2 ஆகிய இரு தேதிகளில் சவரனுக்கு ரூ 560 குறைந்துள்ளது