சகோதரன் அமைப்பு சார்பில் LGBTIQA+ மாத தொடக்கமாக பிரைட் கொடியேற்றம்

குடும்பங்களிடையே மாற்று பாலின மற்றும் மாற்று பாலியல் மக்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகம் உயர்ந்துள்ளது.தமிழகம் மாற்று பாலின மக்களின் பாதுகாப்பில் முதல் மாநிலமாக திகழ்கிறது என சகோதரன் அமைப்பின் நிறுவனர் டாக்டர் சுனில் மேனன் தெரிவித்தார். - சகோதரன் அமைப்பின் நிறுவனர் டாக்டர் சுனில் மேனன்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் உலகம் முழுவதும் LGBTIQA+ சமூகத்தினருக்கான Pride மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில், இந்த சமூகத்தினருக்கான சட்டங்கள், அவர்களுக்கான சமூக உரிமைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள், இவைபற்றியெல்லாம் பேசப்படும்.இப்படியாக இந்த மாதம் முழுக்க கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், அதின் ஒரு பகுதியாக சென்னை சூளைமேடு பகுதியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்று பாலினருக்கான சங்கமான சகோதரன் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் pride கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

கொடியேற்றத்தை தொடர்ந்து சகோதரன் அமைப்பின் நிறுவனர் டாக்டர் சுனில் மேனன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், 16 ஆவது ஆண்டாக சென்னை நகரில் மாற்றுப் பாலின பெருமை மதம் கொண்டாடப்பட்டு வருகிறது, மக்களிடம் மாற்று பாலின மக்களின் குறைகள் மற்றும் அவர்கள் படும் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். தமிழக அரசு மற்றும் தமிழக மக்களின் உதவி இல்லாமல் மாற்று பாலின மற்றும் மாற்று பாலிருப்பு மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு துணை நின்றதால் பல்வேறு மாற்று பாலின மற்றும் பாலிருப்பு மக்கள் தைரியமாக சமுதாயத்தில் உள்ளனர் தற்போது தமிழக மக்களிடமும் தமிழகத்தில் வசிக்கும் குடும்பங்களிடையே மாற்றி பாலின மற்றும் மாற்று பாலியல் மக்களை தொடர்பான விழிப்புணர்வு அதிகம் உயர்ந்துள்ளது மேலும் பல்வேறு இயக்கங்கள் காவல்துறையினர் மற்றும் அரசு இத்தகைய மக்களை புரிந்து கொண்டதால் மாற்று பாலினம் மற்றும் மாற்று பாலியல் மக்களிடையே வளர்ச்சி ஏற்படுகிறது இதன் காரணமாக இந்தியாவில் தமிழகம் மாற்று பாலின மக்களின் பாதுகாப்பில் முதல் மாநிலமாக திகழ்கிறது என்றார்.

தொடர்ந்து, சகோதரன் அமைப்பு சார்ந்த குழுவினர் ஐவர் செய்தியாளர்களிடம் பேசினர், பாலின மாற்றம் செய்வதற்கு, அறுவை சிகிச்சை அவசியம் என்பது இல்லை என்றும், பாஸ்போர்ட் பெறுவதற்கு திருநர் என்ற அடையாள அட்டை இருந்தால் போதுமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று அதற்கு நன்றி தெரிவிக்கிறோம். திருநங்கை நல வாரியத்தின் தமிழ் பெயரை திருநங்கை திருநம்பி நல வாரியம் அல்லது திருநர் நலவாரியம் என்று வைக்க வேண்டும். திருநங்கைகள் மட்டுமின்றி திருநர் சமூகம் சார்ந்த அனைவரும் சமூக நலத்திட்டங்கள் கிடைக்க வேண்டும். தற்கொலை முயற்சிகள் மற்றும் தற்கொலைகள் உட்பட LGBTIQA+ நபர்கள் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தால் உருவாக்கப்பட்ட LGBTIQA+ உள்ளடக்கிய மனநலக் கொள்கை இன்னும் செயல்படுத்தப்படவில்லை உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Tags

Next Story