கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டெடுப்பார் - ஓ.பன்னீர் செல்வம்

கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டெடுப்பார்  - ஓ.பன்னீர் செல்வம்

 ஓ.பன்னீர் செல்வம் 

வைகை ஆற்றில் இருந்து உபரி நீராக கடலில் கலக்கும் நீரை ராமநாதபுரம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு சென்று குடிநீர் பற்றாக்குறையை போக்குவேன். சிறு குறு தொழில்களை கொண்டு வந்து சேர்ப்பேன். கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டெடுப்பார் என்று உறுதி கூறுகிறேன் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி கட்சி சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் ஆயத்தப்பணிகளுக்காக தமது கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது பேசிய அவர், உங்கள் ஆதரவோடு சுயேட்சையாக போட்டியிடுகிறேன். என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இந்த ராமநாதபுரம் புண்ணிய பூமி. நீதிக்கு நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனால்தான் நான் இத்தொகுதியில் போட்டியிடுகிறேன். எனக்கும் நல்ல நீதியினை இந்த தொகுதி வழங்கும்.

பாஜக கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றி பெற செய்வதற்கான வளமான கட்டமைப்பை பாஜக உருவாக்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டவுடன் இங்கு வீடு எடுத்து தங்கி உங்கள் கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் கொண்டு சேர்ப்பேன். இப்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்த எனது பெயரில் 6 பேர் போட்டியிடுகிறார்கள். மக்கள்தான் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், வைகை ஆற்றில் இருந்து உபரி நீராக கடலில் கலக்கும் நீரை ராமநாதபுரம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு சென்று குடிநீர் பற்றாக்குறையை போக்குவேன். சிறு குறு தொழில்களை கொண்டு வந்து சேர்ப்பேன். கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டெடுப்பார் என்று உறுதி கூறுகிறேன். எனவே பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் எனக்கு மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும் என்று பேசினார்.இக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story