மதுரை புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு புறப்பட்டார்.

ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் 2:10 மணி அளவில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் எலிப்பாடில் வந்து இறங்கினார் .அங்கிருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு சென்று அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி 22 புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமியை வழிபாடு நடத்தினார். ராமகிருஷ்ண மடத்தில் தங்கி ஓய்வெடுத்தார் இன்று காலை சரியாக 9:00 மணி அளவில் ராமகிருஷ்ண மடத்தில் இருந்த புறப்பட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல் முனை வடகடல் தென்கடல் சங்கமிக்கும் இடத்தில் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

மேலும் அங்கு கடல் அன்னைக்கு மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தினார் அதன் பின் அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் இலங்கையில் ராமன் ராவணனை வதம் செய்த பின்பு இலங்கை வேந்தனாக விபஷனருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற கோதண்ட ராமர் கோவிலுக்கு பிரதமர் சென்றார் அவருக்கு கோதண்டராமர் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை வழங்கப்பட்டது மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் கோதண்டராமரை வழிபாடு நடத்தினார்.

வழிபாட்டுக்கு பின் சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் அமிர்த வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதலத்திற்கு வந்தார் அவருக்கு வாசலில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர் அவர்களை பார்த்தவாறு கையை அசைத்த பாரத பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்குள் சென்றார் பின்பு ஹெலிகாப்டரில் ஏறிய பிரதமர் மதுரை புறப்பட்டார் பிரதமரின் வருகை ஒட்டி ராமேஸ்வரம் தனுஷ்கோடி சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தது தற்போது பிரதமர் விமானம் மூலம் மதுரை கிளம்பிய பின்பு தற்போது பாதுகாப்பு நலன் கருதி அடைக்கப்பட்டிருந்த சாலைகள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காக மீண்டும் திறந்து விடப்பட்டது.

Tags

Next Story