பிரதமர் நரேந்திர மோடி நாளை வேலூர் வருகை!

பிரதமர் நரேந்திர மோடி நாளை வேலூர் வருகை!

பைல் படம்

பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி வேலூர் கோட்டை மைதானத்தில் பிரசாரம் செய்ய நாளை வர உள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி வேலூர் கோட்டை மைதானத்தில் பிரசாரம் செய்ய நாளை (புதன்கிழமை) வர உள்ளார். அவரது வருகையையொட்டி வேலூர் முழுவதும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும் வகையில் யாரும் தங்கி உள்ளனரா? என்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story