பிரதமர் வருகை - விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
மதுரை விமான நிலையம்
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் நேற்று வழிபாடு செய்தார் . காலை 11 மணிமுதல் 12.40 வரை ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்தார், மதியம் 2 மணிக்கு ராமேஸ்வரத்துக்கு சென்ற பிரதமர் மோடி ராமநாதசாமி கோயிலில் வழிபாடு செய்தபின் இரவு அங்கேயே தங்கினார். தனுஷ்கோடி அரிச்சல் முனை, கோதண்டராமசாமி கோயில்களுக்கும் இன்று செல்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மதுரை விமான நிலையம் வந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் டெல்லி செல்ல உள்ள நிலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story