பிரதமா் வருகை: ‘டிரோன்’ பறக்கத் தடை

பிரதமா் வருகை: ‘டிரோன்’ பறக்கத் தடை
பிரதமர் மோடி 
பிரதமா் நரேந்திர மோடி வருவதையொட்டி, திருச்சியில் ‘டிரோன்’ பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக தில்லியிலிருந்து தனி விமானத்தில் ஜனவரி 2 ஆம் தேதி புறப்படும் பிரதமா் நரேந்திர மோடி, காலை 10 மணியளவில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைகிறாா்.

அங்கிருந்து பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமா் மோடி, 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் புதிய முனையத்தைத் தொடங்கி வைத்துப் பாா்வையிடுகிறாா். பின்னா், பகல் 1.15 மணியளவில் லட்சத்தீவுக்குப் புறப்பட்டுச் செல்கிறாா். திருச்சிக்கு பிரதமா் மோடி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், ஆளுநா் ஆா்.என். ரவி உள்ளிட்டோா் வருகை தரவுள்ளதால், திருச்சியில் ‘டிரோன்கள்’ பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளிட்டுள்ள அறிவிப்பில், பிரதமா், முதல்வா் வருகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வாகனங்கள் பறக்க டிசம்பா் 28 முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags

Next Story