சேலத்தில் மாநில அளவிலான வாள்சண்டை போட்டி..!

சேலத்தில் மாநில அளவிலான வாள்சண்டை போட்டி..!
X

வெற்றி பெற்றுவர்களுக்கு பரிசு வழங்கல் 

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வாள்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

20 வயது உடையவர்களுக்கான மாநில அளவிலான வாள் சண்டை போட்டி சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. இந்த போட்டியில் சேலம், கன்னியாகுமரி, திருச்சி, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 350 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சோனா தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் செந்தில்குமார் பதக்கங்கள் அணிவித்து பாராட்டு தெரிவித்தார். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் கவிதாஸ், சேலம் மாவட்ட வாள் சண்டை சங்க செயலாளர் அரசு வக்கீல் வஸ்தாத் கிருஷ்ணன், தலைவர் எஸ்.பி.கோசலம், உதவி செயலாளர் மணிகண்டன், தினேஷ், சபரிநாத், மனோஜ், முன்னாள் செயலாளர் நாகப்பன் உள்பட பலர் பாராட்டினர்.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் வருகிற 31, 1, 2, 3 ஆகிய தேதிகளில் சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் தேசிய போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர் என்று சேலம் மாவட்ட வாள்சண்டை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story