ஜூன்.15 க்குள் தயாரிப்பாளர்கள் கில்ட் தேர்தல் - உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜூன்.15 க்குள் தயாரிப்பாளர்கள் கில்ட் தேர்தல் - உயர் நீதிமன்றம் உத்தரவு

பைல் படம் 

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டின் தேர்தலை ஜூன் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் வரை கில்டை நிர்வகிக்க, உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்க கோரி, கில்டின் செயலாளர் எம்.ஜம்பு மனு அளித்துள்ளார். தேர்தல் அதிகாரிகளாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், வி.பாரதிதாசன் ஆகியோரை நியமித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தேர்தல் நடைமுறைகளுக்கு இரு தரப்பும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது .

Tags

Next Story