கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை!

கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை!

தூத்துக்குடியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: 17.05.2024 அன்று முதல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, வானிலை ஆய்வு மையத்திலிருந்து பெறப்பட்ட செய்தியில், 18.05.2024 அன்று முதல் 22.05.2024 வரை குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோர பகுதிகளில் சுழல் காற்றானது மணிக்கு 45-55 மி.மீ முதல் 65கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 18.05.2024 அன்று முதல் 22.05.2024 வரை நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும், தங்களது படகுகள் மந்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக நிறுத்திடுமாறும் தங்களது சங்கங்களைச் சாந்த அனைத்து மீனவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்

Tags

Next Story