கர்நாடகா அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

கர்நாடகா அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

நூதன ஆர்ப்பாட்டம்


செய்யாறில் கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் காவிரியில் கர்நாடகா முறையாக தண்ணீர் திறக்காததை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி செப்டம்பர் மாதத்தில் 32 டிஎம்சி, அக்டோபர் மாதத்தில் 40 டிஎம்சி நீரை காவிரியில் கர்நாடகா திறந்து விட நடுவர் மன்றம் உத்தரவிட்ட நிலையில் 2023 நடுவர் மன்ற குழுவிடம் செப்டம்பர் மாதம் 16 ஆயிரம் கன அடி நீர் என 32 டிஎம்சி நீர் திறந்துவிட தமிழக அரசு கேட்க 5000 கன அடி நீர் மட்டுமே கர்நாடக அரசு காவிரி நீர் திறந்தது அக்டோபர் மாதம் 12 ஆயிரம் கன அடி வினாடிக்கு என கேட்க 40 டிஎம்சி நீர் திறந்துவிட தமிழக அரசு கேட்க கர்நாடக அரசு 3000 கன அடி மட்டுமே திறந்து விட்ட நிலையில் குருவை சாகுபடி தீய்ந்து விட்டது.

எனவே பேரிடர் நிதி எக்டருக்கு 80 ஆயிரம் வழங்கவும் காப்பீடை தனியாருக்கு டெண்டர் விடாமல் அரசு ஏற்று நடத்த வேண்டும் பிற மாநிலத்தை போல நீர் சேமிக்க 600 டிஎம்சி அணை கட்ட வேண்டும் மேலும் 6 வாரம் ஏரி கூலி 9000 உடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அக்டோபர் 30 ல் 89 வது காவிரி குழு டெல்லியில் கூடி நீர் கண்காணிப்பு செய்ய உள்ளதை வன்மையாக கண்டித்தும் மத்திய அரசு பேரிடர் நிதி ரூபாய் 2000 கோடி வழங்கவும் வலியுறுத்தி காவிரியில் நீர் கேட்டால் தமிழர்களை காட்டுமிராண்டிகள் போல அடித்து காயப்படுத்துவது போல நூதனமாக நாடகம் ஆடி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செய்யாற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story