திமுக அரசை கண்டித்து செல்லூர் ராஜு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

திமுக அரசை கண்டித்து  செல்லூர் ராஜு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!


திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிப்பெண் தாக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிப்பெண் தாக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிப்பெண் தாக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆர்ப்பாட்டம் அண்மையில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன். மனைவி மெர்லினா வீட்டில் பணிபுரிந்து வந்த 18 வயது இளம்பெண் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த நிலையில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மனைவி மெர்லினா தன்னை கொடூரமாக தாக்கியதாக காயங்களுடன் பாதிக்கப்பட்ட சிறுமி புகாரளித்திருந்தார்.

இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன். மனைவி மெர்லினாவை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சிறுமி தாக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கும் விதமாக அமைந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை செல்லூர் 50 அடி ரோடு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறிப்பாக, பட்டியலின மாணவியின் மீது வன்கொடுமையை ஏவிவிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் குடும்பத்தினர் மீது உரிய எடுக்காததை கண்டித்தும், ஆளும் திமுக அரசும் முதலமைச்சரும் காவல்துறையை செயல்படவிடாமல் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதை கண்டித்தும், திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஆளும் திமுக அரசால் மக்களுக்கு பாதுகாப்பில்லை, முதலமைச்சர் ஸ்டாலின் தலையீட்டால் காவல் துறை முடங்கி கிடக்கின்றன போன்ற கண்டனம் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags

Next Story