சோளிங்கரில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்
ராணிப்பேட்டை மாவட்டம் பானவரம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2006ம் ஆண்டு முதல் மகப்பேறு அறுவை சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மகப்பேறு அறுவை சிகிச்சை பிரிவு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் மகப்பேறு அறுவை சிகிச்சை பிரிவு கொண்டு வர வேண்டும் எனவும் சிகிச்சை முறையை மேம்படுத்த வேண்டும் எனவும் பானாவரப் பகுதி பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெற்ற இந்த கட்டண ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினரும் தேமுதிக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மனோகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாவட்ட நிர்வாகத்துக்கும் ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகத்திற்கு எதிராக கன்னட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதில் காவேரிப்பாக்கம் ஒன்றிய அமைத்தலைவர் விஜய் ஒன்றிய செயலாளர் குணா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்