இலவசமாக தீவனம் வழங்குதல்
இலவசமாக கால்நடை தீவனம் வழங்குதல்
நீலகிரி மாவட்டம் , மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கடும் வறட்சி காரணமாக தண்ணீர் மற்றும் தீவனம் கிடைக்காததால் 50க்கும் மேற்பட்ட வளர்ப்பு கால்நடைகள் இறந்தன. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. அது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, கால்நடை துறை அதிகாரிகளுக்கு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். கால்நடைத்துறை இணை இயக்குனர் சத்யநாராயணா தலைமையிலான குழுவினர்கள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு தற்காலிகமாக, கால்நடைளுக்கு தேவையான தீவனத்தை இலவசமாக வழங்கி வருகின்றனர். இதன் மூலம் மசினகுடி, ஆச்சக்கரை, மாவனல்லா, பொக்காபுரம், வாழைத்தோட்டம் ஆகிய கிராமங்களில் கால்நடைகள் வளர்க்கும் 182 விவசாயிகளும், சுமார் 2400 கால்நடைகளும், பயன் பெற்றுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.