சோளிங்கர்: குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகைமூட்டம்!

சோளிங்கர்: குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகைமூட்டம்!

குப்பை கிடங்கில் தீ விபத்து

நந்தியாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் குப்பைகள் சேகரித்து அகற்றும் பணி ஒப்பந்த முறையில் தனியாரிடம் விடப்பட்டுள்ளது. தினமும் 10 முதல் 15 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டாலும் திடக்கழிவு திட்ட வளாகத்தில் அதிக பட்சம் 2 டன் குப்பைகளை மட்டுமே மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரிக்கின்றனர். மற்ற குப்பைகள் அருகே உள்ள நந்தியாற்றில் கொட்டி வருகின்றனர்.

இவ்வாறு கொட்டப்பட்ட குப்பைகளை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தி வருகின்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சுமார் 150 அடி வரை தீ மள மளவென பரவியது. பிளாஸ்டிக் கழிவுகள் தீயில் துர்நாற்றம் வீசுவதோடு புகை மூட்டமாக காணப்பட்டது.

சோளிங்கர்- திருத்தணி சாலையில் ஏற்பட்ட புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். மேலும் குப்பைகளை தரம் பிரிக்காமல் நந்தி ஆற்றில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு நிலத்தடி நீர் மாசுபடுகிறது. எனவே சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளையும் முறையாக தரம் பிரிக்கவேண்டும் எனவும் நந்தியாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள், சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story