பள்ளிகள் திறப்புக்கு முன் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் வெளியீடு.

பள்ளிகள் திறப்புக்கு முன் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் வெளியீடு.

பள்ளிகளில்  தூய்மை  பணி

பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் மற்றும் இக்கல்வி ஆண்டில் செயல்படுத்த வேண்டிய கல்விச் செயல்பாடுகள் கல்வி சாரா செயல்பாடுகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன .
பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் தலைமை ஆசிரியர் அறை, ஆய்வகம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்தும் தூய்மைப்படுத்தி வைக்க வேண்டும். காலாவதியான ஆய்வகப் பொருட்களை முறைப்படி பதிவேட்டில் பதிவு செய்து நீக்கம் செய்ய வேண்டும். மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்க உறுதி செய்ய வேண்டும். சமையலறை நன்கு சுத்தம் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டு பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். கழிவுநீர் தொட்டிகள் மூடப்பட்டு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறிப்படப்பட்டுள்ளது.

Tags

Next Story