பாஜகவின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

பாஜகவின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

ராதிகா சரத்குமார், ஜான் பாண்டியன்

தமிழ்நாடு பாஜகவின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ராதிகா சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தேசிய அளவில் பாஜகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 9 தொகுதிகள் இடம்பெற்றன. அதன்படி, கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், நீலகிரி மக்களவைத் தொகுதியில் எல்.முருகன் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், பெரம்பலூரில் ஐ.ஜே.கே.தலைவர் பாரிவேந்தர் வேட்பாளராக களமிறங்குகின்றனர்.

தற்போது வெளியிட்டுள்ள நான்காம் கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் விவரம் பின்வருமாறு:-

1) திருவள்ளூர் - பாலகணபதி

2) வட சென்னை - பால் கனகராஜ்

3) திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்

4) நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்

5) திருப்பூர் - முருகானந்தம்

6) பொள்ளாச்சி - வசந்தராஜன்

7) கரூர் - செந்தில்நாதன்

8) சிதம்பரம் - கார்த்தியாயினி

9) நாகை - எஸ்.ஜி.எம்.ரமேஷ்

10) தஞ்சை - எம்.முருகானந்தம்

11) சிவகங்கை - தேவநாதன் யாதவ்

12) மதுரை - ராம சீனிவாசன்

13) விருதுநகர் - ராதிகா சரத்குமார்

14) தென்காசி - ஜான் பாண்டியன்

15) புதுச்சேரி - நமச்சிவாயம்

Tags

Next Story