நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

சீமான்

ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் தான் மருத்துவம் பெற வேண்டும் என சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.

அதன் முக்கிய அம்சங்கள், விடுதலைப்புலிகள் தடையை நீக்க வேண்டும். காங்கிரசும், பாஜகவும் வெவ்வேறல்ல, மாநில உரிமைகளை அடகு வைத்த திமுக அதிமுக. ஆளுநர் பதவியை முழுமையாக நீக்க சட்டத் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம். அயல்நாடு வாழ் இந்தியக் குடிமக்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு , சிறைக் கைதிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு. சின்னம் இல்லாத தேர்தல் நடைமுறை. தொகுதி மேம்பாட்டு நிதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீணடிக்கிறார்கள்.

தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக கொண்டு வருதல். கச்சத்தீவை தாரை வார்த்தது திமுகவும் காங்கிரசும்தான், வடமாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு வேலை வாய்ப்புக்காக வருவதை நாம் தமிழர் கட்சி எதிர்க்கவில்லை, ஆனால் வாக்குரிமை பெற்று தமிழ்நாட்டிற்குள் அரசியலை தீர்மானிக்கும் அதிகாரம் பெறுவதை நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது. உயர்கல்வியில் சேர நுழைவு தேர்வு முறையை நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது. ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் தான் மருத்துவம் பெற வேண்டும் என சட்டம் இயற்ற நாம் தமிழர் கட்சி நடவடிக்கை எடுக்கும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய எழுவருக்கான முழு விடுதலை உள்ளிட்ட வாக்குறுதிகள் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story