புதுவை மாநில மக்கள் நீதி மய்ய செயற்குழு கூட்டம்

புதுவை மாநில மக்கள் நீதி மய்ய செயற்குழு கூட்டம்

கட்சியினருடன் கமலஹாசன் 

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டத்தில் மக்களவை தேர்தலை அணுகுவது குறித்தும், கட்சி வளர்ச்சி குறித்து கமலஹாசன் அறிவுரைகள் வழங்கினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிலையத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் புதுச்சேரி மாநில கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன், மாநில நிர்வாகிகள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற மற்றும் அடுத்து வரவிருக்கிற சட்டமன்ற தேர்தல்களை கட்சி அணுக வேண்டிய முறை பற்றியும், கட்சி வளர்ச்சி பற்றியும் அறிவுரைகள் வழங்கினார். கூட்டத்தில் துணைத்தலைவர் தங்கவேலு மற்றும் மாநில செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story