புதுச்சேரியில் ரூ.12,700 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதுச்சேரியில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதுச்சேரியில் 2024-25ம் ஆண்டிற்கு ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் பின்வருமாறு..
புதுச்சேரியில் மானிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும்
இலவச அரிசி மாணிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும்
காரைக்காலில் பழைமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும்
பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும்
மாணவர்களுக்கு காலணி, புத்தகப்பை வழங்கப்படும்
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6500லிருந்து 8000 ஆக உயர்வு
மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3000லிருந்து 6000 ஆக உயர்வு