அதிமுகவை பின்னுக்குத் தள்ளி காய் நகர்த்துகிறது பாஜ - தொல் திருமாவளவன்

அதிமுகவை பின்னுக்குத் தள்ளி காய் நகர்த்துகிறது பாஜ - தொல் திருமாவளவன்

தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக தன்னைக் காட்டிக்கொள்ள அதிமுகவை பின்னுக்கு தள்ளி, பாஜ காய் நகர்த்துகிறது என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறினார். 

தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக தன்னைக் காட்டிக்கொள்ள அதிமுகவை பின்னுக்கு தள்ளி, பாஜ காய் நகர்த்துகிறது என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறினார்.

சென்னை சேத்துப்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அலுவலகம் ஒன்றை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக தன்னை காட்டிக்கொள்ள, அதிமுகவின் வாக்கு வங்கியை பெற பாஜக காய் நகர்த்துகிறது, அதிமுகவை பின்னுக்கு தள்ளும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது இது தமிழ்நாட்டை புரட்டிப்போடு செயலாக உள்ளது என்றார்.

தொடர்ந்து அதிமுக தன் தோழமை கட்சிகளை தாண்டி திமுக கூட்டணி கட்சிகளை கூட்டணிக்கு அழைப்பது உள்நோக்கம் கொண்ட செயலாக உள்ளது. திமுகவிடம் மூன்று தொகுதி கேட்டுள்ளதில் விசிக தெளிவாக உள்ளது, இந்தியா கூட்டணியில் தான் பயணிப்போம் என்று பேசினார். தொடர்ந்து திமுகவினரால் தாக்கப்பட்ட தனியார் செய்தி தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளர் மீது வழக்கு போடப்பட்டது குறித்த கேள்விக்கு, எவ்வளவு முரண்பட்ட கருத்துக்களை ஊடகங்கள் பதிவு செய்தாலும் அது அவர்களின் ஜனநாயக உரிமை என்று விசிக கருதுகிறது தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும்

Tags

Next Story