வாக்காளர்கள் விழிப்புணர்வுக்காக 21-ந் தேதி வினாடி வினா போட்டி

வாக்காளர்கள் விழிப்புணர்வுக்காக 21-ந் தேதி வினாடி வினா போட்டி


மாநில அளவிலான பொதுமக்களுக்கான வாக்காளர்கள் விழிப்புணர்வு வினாடி வினா போட்டியை வரும் 21-ந் தேதியன்று காலை 11 மணி முதல் 11.15 மணிவரை நடக்கிறது.


மாநில அளவிலான பொதுமக்களுக்கான வாக்காளர்கள் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி வரும் 21-ந் தேதியன்று காலை 11 மணி முதல் 11.15 மணிவரை நடக்கிறது.

தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்காளர்களை தவறாமல் வாக்களிக்கச் செய்யும் ஸ்வீப் என்ற திட்டத்தின்படி மாநில அளவிலான பொதுமக்களுக்கான வினாடி வினா போட்டியை வரும் 21-ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி முதல் 11.15 மணிவரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம். அந்த இணையதளத்தில் விவரங்களை 18 மற்றும் 19-ந் தேதிகளில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.

இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். ''இந்தியாவில் தேர்தல்கள்'' என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டி நடைபெறும். மேலும் விவரங்களைப் பெற, https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதளம்; 1800-4252-1950 என்ற மாநில உதவி மைய எண்; 1950 என்ற மாவட்ட உதவி மைய எண் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story