அயப்பாக்கத்தில் விபத்தில் சிக்கிய ராபிடோ பயணி, மற்றும் ஓட்டுநர்

அயப்பாக்கத்தில் விபத்தில் சிக்கிய ராபிடோ பயணி, மற்றும் ஓட்டுநர்

கோப்பு படம்

ஆவடி அயப்பாக்கத்தில் ரேபிடோ செயலியில் பதிவு செய்து பயணித்த இளம் பெண்ணும் ராபிடோ ஓட்டுனரும் விபத்தில் சிக்கினார்.
ஆவடி அருகே அயப்பாக்கத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த ஆவடி அருகே அயப்பாக்கம் சாலையில் ராபிடோ எனப்படும் ஆன்லைன் பேக் டாக்ஸி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் அந்த செயலி வாயிலாக தனது பைக்கை புக் செய்திருந்த இளம் பெண்ணை ஏற்றிக்கொண்டு அயப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய பைக் டாக்ஸி ஓட்டும் இளைஞரும், இளம்பெண்ணும் சாலையில் விழுந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனமும் இவர்கள் மீது பலமாக மோதியது. இதில் இளம் பெண் லேசான காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் ஆன்லைன் பைக் டேக்ஸி ஓட்டி வந்த இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வரவைத்து உயிருக்கு போராடிய இளைஞரையும், லேசான காயத்துடன் தப்பிய இளம் பெண்ணையும் மீட்டு அருகே உள்ள ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்த பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story