வேலூர்: வெளுத்து வாங்கிய மழை - எவ்வளவு மழை பெய்துள்ளது தெரியுமா?

வேலூர்: வெளுத்து வாங்கிய மழை - எவ்வளவு மழை பெய்துள்ளது தெரியுமா?

மழை

வேலூர் மாவட்டத்தில் 453.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8:30 மணி வரை என கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை வேலூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதாவது, காட்பாடி ரயில் சந்திப்பு பகுதியில் 37.20 மில்லி மீட்டர் மழையும், விரிஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் 28.40 மில்லி மீட்டர் மழையும்,பேரணாம்பட்டு பகுதியில் 42.40 மில்லி மீட்டர் மழையும், அனைக்கட்டு பகுதியில் 120 மில்லி மீட்டர் மழையும், மோர்தானா அணை பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 453.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், இதன் சராசரி அளவு 37.82 மில்லி மீட்டர் ஆகும்.

Tags

Read MoreRead Less
Next Story