தமிழகத்தில் 4 - நாட்களுக்கு மழை !! வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 4 - நாட்களுக்கு மழை !! வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை

தமிழகத்தில் கோடை மழை தொடங்கியுள்ள நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் தான் வெயில் அதிகரிக்கும் ஆனால் இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கிவிட்டது.

கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும் இந்த ஆண்டு கோடை காலம் ஆட்சி தீவிர படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது தென்காசி, திருநெல்வேலி ,நீலகிரி ,கோவை ,தேனி ,விருதுநகர் ,திண்டுக்கல் ,திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் நாளை நீலகிரி, கோவை, திருப்பூ,ர் திண்டுக்கல், ஈரோடு, கரூர் ,நாமக்கல் ,சேலம் என எட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் நாளை மறுநாள் அதாவது மே( 10 )தேதி நீலகிரி ,கோவை ,திண்டுக்கல் ,கரூர் ,நாமக்கல் ,சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருப்பூர் என 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் மே 11ஆம் தேதியை பொருத்தவரை கோவை, திண்டுக்கல், தேனி ,தென்காசி ,நெல்லை, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி அணை 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர்.

வெப்பநிலை பொறுத்த அளவில் அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகம் ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறைக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான மாநிலத்தை பொறுத்தளவில் சென்னை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story