சென்னை புறநகர் மற்றும் நகர் பகுதிகளில் மிதமான மழை

சென்னை புறநகர் மற்றும் நகர் பகுதிகளில் மிதமான மழை

மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாலைக்கு மேல் வெப்பம் தணிந்து மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், ஐயப்பன்தாங்கல் திருவேற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது மழை பொழிந்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இங்கு மட்டுமின்றி சென்னையில் அரும்பாக்கம்,அண்ணா நகர், சூளைமேடு, கோயம்பேடு, வடபழனி, மதுரவாயல், வானகரம், முகப்பேர், அம்பத்தூர், போரூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ராயப்பேட்டை சிந்தாதிரிப்பேட்டை, தியாகராய நகர், கோடம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், பெருங்களத்தூர், பாடி, பழவந்தாங்கல், பரங்கிமலை, கிண்டி, பட்டினம் பாக்கம், சென்ட்ரல், வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Tags

Next Story