வேலூரில் மாலையில் சூறைக்காற்றுடன் வெளுத்த மழை
மழை
வேலூர் மாநகரப் பகுதியில் மாலை வேளையில் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
அக்னி நட்சத்திர வெயில் தொடங்கிய நிலையில், இன்று 109.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியது. இந்த நிலையில் வேலூர் மாநகர், சத்துவாச்சாரி, காந்திநகர், விருதம்பட்டு, வேலப்பாடி, கொணவட்டம், காட்பாடி, பிரம்மபுரம், வேலூர் பழைய பேருந்து நிலையம், பாகாயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் சாரலாக ஆரம்பித்த மழை, பின்னர் பலத்த மழையாக மாறி சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.
மேலும் வேலூர் மாநகர உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்பட்டது. பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கோடை கன மழையினால் வேலூர் குளிர்ச்சியாக மாறியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story