ராஜீவ் நினைவிடத்தில் செல்வப்பெருந்தகை தலைமையில் நினைவு அஞ்சலி
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு தினம் இன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் கமிட்டியின் மூலம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழக காங்கிரஸ் சார்பில் அவர் உயிர் நீத்த இடமான ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் தலைவர்களான திருநாவுக்கரசு கே வி தங்கபாலு விஜய் வசந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவ்வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவருக்கு வீணைக்கச்சேரி மூலம் புகழ் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயங்கரவாத உறுதிமொழி தலைவர் செல்வப் பெருந்தகை வாசிக்க அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.
செய்தியாளரிடம் பேசுகையில், விஞ்ஞான புரட்சியின் மூலம் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும் என ராஜீவ் காந்தி சூளுரைத்து அதனை செயல்படுத்தி காட்டியவர். குப்பனும் சுப்பனும் சாமானிய கிராம மக்களும் பஞ்சாயத்து ராஜ் சட்டமூலம் தலைநிமிர்ந்து பச்சை மையில் கையெழுத்து இடும் நிலைக்கு அவர்களை உருவாக்கியது என்றைக்குமே மறுக்க முடியாது.அவருடைய கனவுகளை வருங்காலத்தில் நினைவாக்க உறுதி ஏற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.