எல்.பி.பி கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை கைவிடக்கோரி பேரணி

கீழ்பவானி கால்வாய் காங்கீரிட் அமைப்பதற்காக தமிழக அரசு சுமார் 710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காங்கீரிட் தளம் அமைக்கப்படுவதால் விவசாயம் மற்றும் குடிநீர் பாதிக்கப்படும் எனக்கோரி விவசாய சங்கத்தினர் காங்கீரிட் திட்டத்தை கைவிடக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீழ்பவானி பாசன பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காங்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும் , பாசன சபைகளுக்கு தேர்தல் நடத்தக்கோரியும் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். முன்னதாக பழைய பாளையத்திலிருந்து தொடங்கி இருந்த பேரணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், பா.ஜ.க விவசாய அணித்தலைவர் நாகராஜ் மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தினர் பல பங்கேற்றனர்.

Tags

Next Story